Friday, January 29, 2010
பிரம்மன் பிதற்றுகிறான்...!!

காதல் போதையில் கச்சிதமாய் கம்பன் வடித்த கடைசி கவிதை நாம்...பிரம்மன் கூட பொறாமையில் பிதற்றுகிறான்...நம்மை படைக்க தெரிந்த அவனுக்கு நம்மை போல் காதலை படைக்க தெரியவில்லையே..... [ Read More ]
Thursday, January 21, 2010
பைத்தியகாரர்கள்..!!

பைத்தியகாரர்கள்
அப்புறம் என்ன..
உன்னை பார்த்த பின்னும்
அழகி போட்டி நடத்துகிறார்களே......... [ Read More ]
உழவன் இன்றி உலகேது..!! (தை 2010)

உழவா..!நீ விழி மறந்து, வலி சுமந்து..வியர்வை விருந்திட்டு வளர்த்திட்டநெற்பயிரின் வனப்பு கண்டு..வாய்பிளந்து பொழிகிறது வான் மேகம்..!!
மலை மறைவில் மறைய மறுக்கிறது,மயக்கத்தில் தினம் மாலை சூரியன்..!!
மண்ணில் நீ விதைத்திட்டாலும்,கண் எனும் கற்ப பையில் அன்றோ வளர்த்திட்டாய்..!!
ஒவ்வொரு விதையிலும் ஓராயிரம் உயிர் உருவாக்கி.. மண்ணிலும் முத்தெடுக்கும் வித்தையை உன்னிடத்திலன்றோ இனி பிரம்மனும் கற்று கொள்ள வேண்டும் ..!!
உழைப்பை உருக்கியன்றோ அறுவடையை உரித்தாக்கினாய்உழைக்கும் முன்னே உருகிபோயிருக்கும் உன்னிடத்தில் மெழுகு இருந்திருந்தால்.... [ Read More ]
அப்ப கூட வரல..!

நான் அழும் போதெல்லாம் அத்தனை முறைகை கொடுப்பாள் அம்மா .. அப்பவும் வரல..!
நான் நடை பழகுவதிலிருந்து...உடை பழகும் வரை கை கொடுத்தார் அப்பா... அப்ப கூட வரல..!
தினம் நூறு பொய் சொல்லிநண்பனுடன் ஊர் சுற்றும் போதும் வரல..!
ஓடும் ரயில் என ஒரு முறை தான் கை குடுத்தேன்..உன்னை கீழே விழாமல் பிடிப்பதற்காய்..!
இப்போ வந்திருச்சு...அடுத்து நான் இறங்கும் முன்அந்த ரயிலை விட அத்தனை நீளமாய் கவிதை ..!
இப்போ என்னாச்சு எனக்கு...??சத்தியமாய் விழ போனது நீதானே...??!!!... [ Read More ]
நாளை வரை வரமாட்டாய்

தனிமை தேடி நான் தனித்து நிற்கையில் ஆளே இல்லாத அறை... அங்கேயும் நீ இல்லாத குறை நிறைந்தே நிற்கிறது..நீ செல்லமாய் தான் கிள்ளி சென்றாய்... எனக்கோ மொத்தமாய் இழந்த இதயம் போல் வலிக்கிறது நாளை வரை வரமாட்டாய் எனும் போது...
நீ சிறிது பேசும் போது நிறுத்தி நிறுத்தி பேச மாட்டாயா என ஏங்குகிறேன்... களைத்து போய் நிறுத்திவிட்டால் என்ன பண்ணுவது...
நாம் பேசுகையில் புற்களை செல்லமாய் தடவிநீ சிணுங்கும் போது சிதறும் சிரிப்பில் மெல்ல நான் பறக்கிறேன் உண்மையில் உன் சொற்களை மறந்து... [ Read More ]
இருந்தும் வறட்சி..!

நல்ல மழை..!நல்ல விளைச்சல்..!
இருந்தும் வறட்சி..!
வஞ்சி..
உன்னைவர்ணிக்க
வார்த்தைகள்
இல்லையே..... [ Read More ]