இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Friday, June 29, 2012

வெட்கம்....!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, June 29, 2012 1 comment

ஆழ் கடல்  அத்தனையும்  அகலப்படுத்தி வைத்திருக்கிறேன்... உன் வெட்கம் உதிர்க்கும் முத்துகள் போட்டு வைக்க..மொத்தமாய் தேவைப்படும் என்று...!!! ...  [ Read More ]

Saturday, June 16, 2012

சாட்சி

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Saturday, June 16, 2012 No comments

நீகடித்து துப்பும் நகங்கள் கூட நாளை சாட்சி ஆகலாம்..தேவதைகள்.. வாழ்ந்தார்கள் என்பதற்கு....!!! ...  [ Read More ]

Sunday, June 10, 2012

திருஷ்டி பொட்டு...!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, June 10, 2012 No comments

நீ .. ஒற்றை ரோஜா வைத்து  தெருவில்  வரும் போது... ரோஜா நினைத்ததாம்,  எதற்கு இந்த பூந்தோட்டம்..  நம்மை திருஷ்டி பொட்டாய் வைத்து இருக்கிறதென்று.... ...  [ Read More ]

Friday, June 8, 2012

நீ குளித்த தண்ணீரில்...!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, June 08, 2012 No comments

நீ மட்டும் உம்மென்று..  ஒரு வார்த்தை சொல்..!! வானத்தை கவிழ்த்தி வைக்கிறேன்...!! மேகத்தில் நீ மெதுவாய் குளித்திடு...!! மின்னலை  கொஞ்சம் நிமிர்த்தி வைக்கிறேன்..!! மெல்ல நீ  சடையில் பின்னிடு....!! கொஞ்சம் பொறு...!! நீ குளித்த தண்ணீரில்  நிலவை கொஞ்சம் கழுவி வைக்கிறேன்...!! நீ முகம் பார்க்கும் அளவுக்கு  அது ஒன்றும் அத்தனை வெளுப்பில்லை...!...  [ Read More ]

மாமா பொண்ணு ..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, June 08, 2012 2 comments

கொட்டியே... ஆயிரம் பூக்கள் நிறைத்திட்டாலும்..  உன் குறும்புப் பார்வையில்  அரும்பும் அந்த அழகுக்கு ஈடாகுமோ..??  கோடி சொல் பிணைத்து,  ஓர் ஆயிரம் கவிதை எதற்கு..? "மாமா"வென... நீ  அழைத்திடும் அந்த... ஒற்றைச்சொல் போதுமே..!!! ...  [ Read More ]