இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!
Showing posts with label தமிழ் கவிதை. Show all posts
Showing posts with label தமிழ் கவிதை. Show all posts

Wednesday, July 11, 2012

பொன்னான தருணம்...!! (திருமண வாழ்த்து)

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Wednesday, July 11, 2012 1 comment


நித்தமொரு நெடுந்தவம் புரிந்திட்டாள் போலும்.. 
நித்தியசெல்வன் உந்தன் நெஞ்சை பறித்திடவே!
நீ வண்டென சுற்றிய வாசனை மலர் இவள்..
ஒற்றைப் பார்வையிலே, ஓராயிரம் மடல்தொடுத்தே..
ஒருநொடியில் மனதைபறித்த கள்ளி இவள்!
இவள் சந்தன சிரிப்பொலியின் - சில
சந்தங்கள் போதுமே உம் காதல்
வாழுமே! பல காலங்கள் நின்று!
உணர்வுகளின் சங்கமத்தில், நினைவுகளால்
கனவுகள் கோர்த்தே - வாழுங்கள்
இரவை நீங்க நிலவைப்போல நினைவில் 
நிறைத்திட்ட உறவாய் என்றென்றும்..!! 

திருமண வாழ்த்து !!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Wednesday, July 11, 2012 No comments


வளரும் காவியமாய் உம் வாழ்க்கை..
தொடங்கிடவே வள்ளுவன் வந்து 
பாடிடட்டும் வாழ்த்துப்பா! - கனவில்தினம் 
கரைந்துபோன உம்காதல் கதைபேசிடவே
கம்பன் இல்லையே இங்கு! 
உம் ஒற்றைக்காதல் போதுமே - வரும்
காவியம்யாவிலும் பேசிடவே!
திரை கடல் இணைத்தே - தினம்
இரவை விழுங்கிட்ட உம் காதல்
கதையை கேட்டிடவே.. வெட்கச்சிவப்பில்
மெல்லமாய் கண்விழிக்கிறான் கதிரவனும்!
மந்திரங்கள் முழங்கிட.. மங்கள நாண்சூடியே
பொதிகை மலைசூடும் வான்முகில் போல..
எதுகையென இருங்கள் இருவரும்!
நெடிய சொந்தங்கள் நெஞ்சார வாழ்த்திடவே..
முக்கோடி தேவர்களும்.. முதல் நின்று வாழ்த்திடட்டும்!
என மலர்க்கோடி தூவி நின்று மனதார வாழ்த்துகிறோம் நாங்களும்.....!!

Saturday, June 16, 2012

சாட்சி

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Saturday, June 16, 2012 No comments



நீ
கடித்து துப்பும் 
நகங்கள் கூட 
நாளை 
சாட்சி ஆகலாம்..
தேவதைகள்.. 
வாழ்ந்தார்கள் என்பதற்கு....!!!




Sunday, June 10, 2012

திருஷ்டி பொட்டு...!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, June 10, 2012 No comments


நீ ..
ஒற்றை ரோஜா வைத்து 
தெருவில் 
வரும் போது...


ரோஜா நினைத்ததாம், 


எதற்கு இந்த பூந்தோட்டம்..
 நம்மை திருஷ்டி பொட்டாய்
வைத்து இருக்கிறதென்று.... !!

Friday, June 8, 2012

மாமா பொண்ணு ..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, June 08, 2012 2 comments





கொட்டியே...
ஆயிரம் பூக்கள் நிறைத்திட்டாலும்.. 


உன்
குறும்புப் பார்வையில் 
அரும்பும் அந்த அழகுக்கு
ஈடாகுமோ..?? 


கோடி சொல் பிணைத்து, 
ஓர் ஆயிரம் கவிதை எதற்கு..?


"மாமா"வென...
நீ  அழைத்திடும்
அந்த...
ஒற்றைச்சொல் போதுமே..!!!





Sunday, May 13, 2012

அன்னையர் தினம்

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, May 13, 2012 No comments



நான் சுற்றித்திரிந்த உலகமே...
என்னை தூக்கி சுமந்த அகிலமே...
நான் இந்த உலகையே கைப்பற்ற கூட வேணாம்,  
உன் கைப்பற்றி நடந்திட்டாலே போதும்... 
என்னை விட என்னை அறிந்த 
உன்னை போற்றும் இந்த ஒரு நொடி போதும் 
மறித்து....
மறுபடியும் மறுபடியும் மண்ணில் பிறந்திட வேண்டும் 
உன் மகன் என்ற அந்த ஒற்றைச் சொல்லுக்காய்....

அன்னையர் தின வாழ்த்துக்களுடன் 
என்றும் உங்கள் 

LM



Tuesday, September 27, 2011

இப்படிக்கு, நானும் நம் காதலும் தூங்கும் கல்லறை.

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Tuesday, September 27, 2011 1 comment






அடடா அதற்குள் ஒருவருடம் ஆயிற்றா....
கண்ணீர் ஊற்றி என் கல்லறைத்தூக்கம் கலைத்தவளே நில்...
இன்றாவது நான் சொல்வதை பொறுமையாய், முழுமையாய் கேள்...!! 
தயவு செய்து... 
என் கல்லறையிலாவது, 
ஒரு முற்றுப்புள்ளி இட்டு போ..!!
அய்யகோ...!!! 
உனக்காய் உயிரை விட்டு, 
உன் பிள்ளைக்காய் பெயரையும் விட்டு, 
எதிர்வரும் பிறவியிலும்...
என் நினைவு நாளில் மட்டும்,
உன் நினைவில் வாழ வைத்துவிடாதே....!!


இப்படிக்கு,
நானும் நம் காதலும் தூங்கும் கல்லறை.