Showing posts with label arugankulam. Show all posts
Showing posts with label arugankulam. Show all posts
Saturday, April 14, 2018
Wednesday, January 1, 2014
Wednesday, July 11, 2012
பொன்னான தருணம்...!! (திருமண வாழ்த்து)
நித்தமொரு நெடுந்தவம் புரிந்திட்டாள் போலும்..
நித்தியசெல்வன் உந்தன் நெஞ்சை பறித்திடவே!
நீ வண்டென சுற்றிய வாசனை மலர் இவள்..
ஒற்றைப் பார்வையிலே, ஓராயிரம் மடல்தொடுத்தே..
ஒருநொடியில் மனதைபறித்த கள்ளி இவள்!
இவள் சந்தன சிரிப்பொலியின் - சில
சந்தங்கள் போதுமே உம் காதல்
வாழுமே! பல காலங்கள் நின்று!
உணர்வுகளின் சங்கமத்தில், நினைவுகளால்
கனவுகள் கோர்த்தே - வாழுங்கள்
இரவை நீங்க நிலவைப்போல நினைவில்
நிறைத்திட்ட உறவாய் என்றென்றும்..!!
திருமண வாழ்த்து !!
வளரும் காவியமாய் உம் வாழ்க்கை..
தொடங்கிடவே வள்ளுவன் வந்து
பாடிடட்டும் வாழ்த்துப்பா! - கனவில்தினம்
கரைந்துபோன உம்காதல் கதைபேசிடவே
கம்பன் இல்லையே இங்கு!
உம் ஒற்றைக்காதல் போதுமே - வரும்
காவியம்யாவிலும் பேசிடவே!
திரை கடல் இணைத்தே - தினம்
இரவை விழுங்கிட்ட உம் காதல்
கதையை கேட்டிடவே.. வெட்கச்சிவப்பில்
மெல்லமாய் கண்விழிக்கிறான் கதிரவனும்!
மந்திரங்கள் முழங்கிட.. மங்கள நாண்சூடியே
பொதிகை மலைசூடும் வான்முகில் போல..
எதுகையென இருங்கள் இருவரும்!
நெடிய சொந்தங்கள் நெஞ்சார வாழ்த்திடவே..
முக்கோடி தேவர்களும்.. முதல் நின்று வாழ்த்திடட்டும்!
என மலர்க்கோடி தூவி நின்று மனதார வாழ்த்துகிறோம் நாங்களும்.....!!
Friday, June 29, 2012
Saturday, June 16, 2012
Sunday, June 10, 2012
Friday, June 8, 2012
நீ குளித்த தண்ணீரில்...!!
நீ மட்டும்உம்மென்று..
ஒரு வார்த்தை சொல்..!!
வானத்தை கவிழ்த்தி வைக்கிறேன்...!!
மேகத்தில் நீ மெதுவாய் குளித்திடு...!!
மின்னலை
கொஞ்சம் நிமிர்த்தி வைக்கிறேன்..!!
மெல்ல நீ
சடையில் பின்னிடு....!!
கொஞ்சம் பொறு...!!
நீ குளித்த தண்ணீரில்
நிலவை கொஞ்சம் கழுவி வைக்கிறேன்...!!
நீ முகம் பார்க்கும் அளவுக்கு
அது ஒன்றும் அத்தனை வெளுப்பில்லை...!!!
Tuesday, September 27, 2011
இப்படிக்கு, நானும் நம் காதலும் தூங்கும் கல்லறை.

அடடா அதற்குள் ஒருவருடம் ஆயிற்றா....
கண்ணீர் ஊற்றி என் கல்லறைத்தூக்கம் கலைத்தவளே நில்...
இன்றாவது நான் சொல்வதை பொறுமையாய், முழுமையாய் கேள்...!!
தயவு செய்து...
என் கல்லறையிலாவது,
ஒரு முற்றுப்புள்ளி இட்டு போ..!!
அய்யகோ...!!!
உனக்காய் உயிரை விட்டு,
உன் பிள்ளைக்காய் பெயரையும் விட்டு,
எதிர்வரும் பிறவியிலும்...
என் நினைவு நாளில் மட்டும்,
உன் நினைவில் வாழ வைத்துவிடாதே....!!
இப்படிக்கு,
நானும் நம் காதலும் தூங்கும் கல்லறை.
Friday, September 9, 2011
திருமணமாம் திருமணம்..!!
இடம் மாறிய இதயத்தோடு தினம்
கனவில் கதை பேசியும்...பழகிய பாதையிலும் பாதைதவறி,
பார்வை தேடிய பாதங்களே!!
கால்வலிக்க காத்திருந்து, கண்ணசைவில்
கவிதை பருகியதும் போதும் - இதோ
மல்லியும் முல்லையும், மங்கள நாதமொடு
நட்பொடு சொந்தமென நாற்திக்கும் நல்வாழ்த்திட..!
பூமாலைசூடி புதுமஞ்சள் நாண்முடித்திடு - உம்
புதுவாழ்வின் முதல்பக்கமே பூத்திடட்டும்,
சிந்தனை ஒன்றென நீங்கள் சிந்திடும்
புன்னகை வண்ணம் கொண்டு..!
பாரதி கம்பனொடு, பார்புகழ் வள்ளுவன்
வாக்காய் வாழ்ந்திடுவீர் நீவிர்!
Wednesday, September 7, 2011
காலவெள்ளம் கண்டிரா காதல் ஓவியம் காணுங்கள்
சுபம் ஆயிரம் சூடிடவந்த 'சுப்புலட்சுமியே'..
தெவிட்டாத தேனமுதாய், வேண்டியதை விரைந்தருளும்..
வெற்றி விநாயகன் வாரி வழங்கிட்ட 'செல்வகுமரனை'..
முன்னோர் ஜென்மத்தின் முழுபயனால் - நீ
வாங்கிவந்திட்ட வரந்தான் உன்தோள் சேர்த்தது..!! - இனி
ஊண் உறக்கம் ஒதுங்கி நின்றிட,
காலவெள்ளம் கண்டிரா காதல் ஓவியம் காணுங்கள்..
கம்பன் வந்து காப்பியமாக்கிடுவான்..!!
நேற்றென்ற மாயைநீக்கி, நாளைதனை நனவாக்கிடும்..
உன்னத கனவோடு ஒப்பற்று வாழுங்கள்..!
வான்புகழ வாழ்ந்தோர் வழிநின்று..!!
தெவிட்டாத தேனமுதாய், வேண்டியதை விரைந்தருளும்..
வெற்றி விநாயகன் வாரி வழங்கிட்ட 'செல்வகுமரனை'..
முன்னோர் ஜென்மத்தின் முழுபயனால் - நீ
வாங்கிவந்திட்ட வரந்தான் உன்தோள் சேர்த்தது..!! - இனி
ஊண் உறக்கம் ஒதுங்கி நின்றிட,
காலவெள்ளம் கண்டிரா காதல் ஓவியம் காணுங்கள்..
கம்பன் வந்து காப்பியமாக்கிடுவான்..!!
நேற்றென்ற மாயைநீக்கி, நாளைதனை நனவாக்கிடும்..
உன்னத கனவோடு ஒப்பற்று வாழுங்கள்..!
வான்புகழ வாழ்ந்தோர் வழிநின்று..!!
மந்திர நாண்..!!
மாக்கோலம் பூந்தோரணம், குலை வாழையோடு,
தினம் திகட்டா தேன்மதுர தீஞ்சுவை செந்தேனாய்..
வான்பொதிகை வண்ணமயில் எண்ணம் கொண்டு
சம்மத மௌனங்கள் சாட்சியாய்...
மாதவப்புதல்வி, மங்கையற்கரசி 'செந்தமிழ்செல்வியை'
மஞ்சள் கயிறோடு,ஊன் உயிர் உறைசெரும்
மறவாத மாணிக்கமாய் மனிதருள் உறவாடிய
சிவசுப்ரமணிய புதல்வா 'ரமேசு' - நீ
வாழ்க பல்லாண்டு...! என வள்ளுவன் குறள் வாழ்த்த
நறுமணமாய் நாளும் மலருங்கள் தமிழாக!
இதிகாச இலக்கணங்கள் வாழ்க்கை தத்துவம்
எடுத்துரைக்க.. எழுதுங்கள் இல்லற வாழ்வை,
'வள்ளுவன்-வாசுகியாக' வாழ்ந்தார்கள் என...!!
மங்கள நாதம் கொஞ்சிடும் நேரம்..!!
கவிதை பேசும் விழிகள் இனி,
காதல் மொழி பேசட்டுமே..!!
காதல் மொழி பேசட்டுமே..!!
காப்பியம் ஆயிரம் கண்டிரா,
ஒப்பிலா உம் காதல் கதைதனை..!!
காலை வெண்பனியின் தெளிவாய், கார்முகில் வடிவாய்..
காதல்கலையை காப்பியமாக்கிட்ட 'கலைச்செல்வியே'..
இந்திரனே இவனென சந்திரன் மயங்கிடும்,
நற்றமிழ் அழகன் எம் 'சரவணக்குமரனை' ..!
ஒப்பிலா உம் காதல் கதைதனை..!!
காலை வெண்பனியின் தெளிவாய், கார்முகில் வடிவாய்..
காதல்கலையை காப்பியமாக்கிட்ட 'கலைச்செல்வியே'..
இந்திரனே இவனென சந்திரன் மயங்கிடும்,
நற்றமிழ் அழகன் எம் 'சரவணக்குமரனை' ..!
மங்கள நாதம் கொஞ்சிடும் நேரம்,
வந்திடும் ஆயிரம் சொந்தங்கள் சூழ்ந்திட - இனி
சொந்தமே இவனென மந்திர மாலைசூடு..!
முன்னின்று வாழ்த்திடும் முத்தமிழ் வேதங்களோடு,
உன்தோள் நின்று துணையாய் எப்போதும் நாங்கள்..!!
மணநாள் காணும் திருநாள் ..!!
பூந்தளிர் வீசும் புதுமண வாசம்,புகுந்திடும் மலர்க்கணை மாதே..
மாதவம் புரிந்திட்ட மாசறு 'முத்தே'..!
வன்சொல் வசையறியா, இன்சொல் இனியவனாம்..
கூந்தல் குடியமரும் குளிர்மலர் குணத்தவனாம்..
மாந்தர் மனங்கவரும் எங்கள் 'ரெங்கராஜனை' !!
பொன்மஞ்சள் பூங்கயிறாக,
உம் நெஞ்சில் இன்னோர் உயிராக..
மானிரு கொம்பாய் மயக்கிடு தெம்பாய்..!!
பாசம் பரப்பும் பக்குவ புள்ளியிட்டு,
புதுநேசம் நிலைக்க நிச்சய கோடிணைத்து..
வாசம் வீசும் வாசல் பூக்கள் மலரட்டும்..!!
என மனதார வாழ்த்துகிறோம்..!!
பூப்புனித நீராட்டு விழா ..!!
மஞ்சள் நீராடி மங்களம் தேடி வரும்..
கொஞ்சும் குல மகளாம் 'ஆனந்த செல்வியே '..!
கொஞ்சும் குல மகளாம் 'ஆனந்த செல்வியே '..!
தீராத விளையாட்டையும் - தினம்
பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய்,
பால்நிலா தாங்கும் வான்முகிலாய்..
தெளிந்த வெண்பனியாய், திசைபல வென்று..
திரவியம் பலதேடி, தெள்ளு தமிழாய்..
மலர்கோடி சூடி மணிமகுடம் தாங்கி..
பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம் நாங்களும்..!!
இனிதே ஆரம்பம் இன்னோர் காவியம்..!!
மழைக்கால மலர்க்கூட்டமாய்,
மாந்தளிர் தழுவும் வெண்பனி மூட்டமாய்,
கோவைக்கனி சுமக்கும் கோடிப்புன்னகையாய்,
பொன்மஞ்சள் கயிறோடு உயிரில் சுமந்திடு..
பொன்மஞ்சள் கயிறோடு உயிரில் சுமந்திடு..
வான்முகில் தேடும் வானவில் 'சுந்தர வள்ளியே' - எம்
காவியம் காணா ஓவியம் 'சக்திவடிவேலை' ..!
காவியம் காணா ஓவியம் 'சக்திவடிவேலை' ..!
செந்தமிழின் சுவையாய், செங்கரும்புச்சாறாய்,
செங்கமல மலராய் சங்கமிக்கும் சந்தன மலர்களே..
மங்களம் பொங்கவரும் உம் இல்லறம் சிறக்க..
முக்கோடி தேவர்களும் தப்பாது வாழ்த்தி நிற்க..!
மலர்க்கோடி தூவிநின்று மனதார வாழ்த்துகிறோம் நாங்களும்..!!
முக்கோடி தேவர்களும் தப்பாது வாழ்த்தி நிற்க..!
மலர்க்கோடி தூவிநின்று மனதார வாழ்த்துகிறோம் நாங்களும்..!!
மண் கண்ட தெய்வம் ..!!
எம் தாய் திருநாட்டின் தங்கப்புதல்வா !!
உனைப்போல் உன்னதமாய்
உனைப்போல் உன்னதமாய்
உழவை அறிந்தோர் உலகில் எவருளர் ??
ஆயிரமாயிரம் ஆங்கில உரங்கள்,
எம் அன்னை மண்ணை அழித்திட்டாலும்..
ஒப்பிலா உம் உன்னத உழைப்பாலன்றோ
பஞ்ச பூதங்களும் பக்குவமாய், இன்னும் பத்திரமாய்..!
பஞ்ச பூதங்களும் பக்குவமாய், இன்னும் பத்திரமாய்..!
உயிர்களிடத்தே பாசமில்லா இப்பூவுலகில்,
பயிர்களிடத்தும் பந்தம் காட்டும் பகலவன் நீயன்றோ..!
பயிர்களிடத்தும் பந்தம் காட்டும் பகலவன் நீயன்றோ..!
தென்றல் தீண்டும் தென்னாடு,
இம்மண்ணை ஆண்ட மறத்தமிழர் இனமே உழவா உன்னோடு !!
Monday, August 15, 2011
உரக்கச் சொல்வோம் சரித்திரம் தனை..!!
வந்தோரெல்லாம் தங்கிச்சென்ற வெறும் சத்திரமா ..??
இல்லை இல்லை ....
ரத்தமின்றி கத்தியின்றி நித்தம் யுத்தம் புகுந்து,
வாழ்வை தொலைத்து, வலியை விதைத்து,
உயிரில் விளைத்திட்ட சரித்திரம்..!!
பயிரை மேய்ந்த பகைவர் கூட்டம் பதுங்கி நடுங்கிட்ட
காற்றும் அறியா கடின ஆயுதமாம் அகிம்சை தந்திட்ட அமைதி தேசம்..!!
ஏய் இளைய பாரதமே...!!
குமரனின் கொடியும் பகவத்சிங்கின் நெடியும் நிறைந்து வீசிட்டதும் ,
வீர சுபாசு வெகுண்டு எழுந்திட்டதும்..
எதற்காய்???
புழுங்கி திரியும் லஞ்ச பேயும்,
மழுங்கி திரியும் மதவெறியும்..
மணிமகுடம் ஏறிஅமரவா???
மறுபடியும் மறித்திட விடாதே,
ஒருமுறை உனக்காய் உயிர் விட்ட..
மாபெரும் தியாகிகளை..!!
ஒருமுறை உரக்கச் சொல்லி விடு,
எம் பாரத மாதா வெறும் சத்திரம் அல்ல...
சரித்திரம்...!!!








.jpeg)













