இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Saturday, April 14, 2018

தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

Posted by Yellem Lm On Saturday, April 14, 2018 1 commentஎல்லோர்க்கும் மூத்தோளாம்..

எத்திசையும் எழில்கமந்திட..
அள்ளக்குறையா
ஆனந்தம் தந்திடும்...
செம்மதுர செழுந்தமிழ்மகளின்
சித்திரை பிறப்பு சிறப்பாய் 
முத்திரை பதித்திடட்டும்
உங்கள் வாழ்வில்...!!!
                
                என்றும் LM 

Sunday, November 30, 2014

இது என்ன இலக்கணமோ ??

Posted by Yellem Lm On Sunday, November 30, 2014 No comments


இது என்ன இலக்கணமோ தெரியவில்லை....!!


நீ சொல்லும் போது மட்டும்....


மறந்துவிடு என்பதற்கும்...


 இறந்துவிடு என்பதற்கும்...


 ஒரு வித்தியாசமும் தெரியவில்லை...!!!

Wednesday, January 1, 2014

இனிய புத்தாண்டு..!!

Posted by Yellem Lm On Wednesday, January 01, 2014 1 comment

இதயம் கனியும்.. இனிய உதயம்
இனி இரவெல்லாம் விடியும்..!
இதழோரம் ஒளிர்ந்தே, வரும் நாள் யாவும் மலரும்..!
ஊர் போற்றும் உன்னத வழியில்
நெஞ்சம் நிமிர்த்தி,
பார்போற்றும் பாதையிடுவோம்
நிச்சயமாய்.... வரும் நாள் யாவும் நமக்காய்தான்....!!!
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களுடன் என்றும் உங்கள்... LM

Wednesday, July 11, 2012

பொன்னான தருணம்...!! (திருமண வாழ்த்து)

Posted by Yellem Lm On Wednesday, July 11, 2012 1 comment


நித்தமொரு நெடுந்தவம் புரிந்திட்டாள் போலும்.. 
நித்தியசெல்வன் உந்தன் நெஞ்சை பறித்திடவே!
நீ வண்டென சுற்றிய வாசனை மலர் இவள்..
ஒற்றைப் பார்வையிலே, ஓராயிரம் மடல்தொடுத்தே..
ஒருநொடியில் மனதைபறித்த கள்ளி இவள்!
இவள் சந்தன சிரிப்பொலியின் - சில
சந்தங்கள் போதுமே உம் காதல்
வாழுமே! பல காலங்கள் நின்று!
உணர்வுகளின் சங்கமத்தில், நினைவுகளால்
கனவுகள் கோர்த்தே - வாழுங்கள்
இரவை நீங்க நிலவைப்போல நினைவில் 
நிறைத்திட்ட உறவாய் என்றென்றும்..!! 

திருமண வாழ்த்து !!

Posted by Yellem Lm On Wednesday, July 11, 2012 No comments


வளரும் காவியமாய் உம் வாழ்க்கை..
தொடங்கிடவே வள்ளுவன் வந்து 
பாடிடட்டும் வாழ்த்துப்பா! - கனவில்தினம் 
கரைந்துபோன உம்காதல் கதைபேசிடவே
கம்பன் இல்லையே இங்கு! 
உம் ஒற்றைக்காதல் போதுமே - வரும்
காவியம்யாவிலும் பேசிடவே!
திரை கடல் இணைத்தே - தினம்
இரவை விழுங்கிட்ட உம் காதல்
கதையை கேட்டிடவே.. வெட்கச்சிவப்பில்
மெல்லமாய் கண்விழிக்கிறான் கதிரவனும்!
மந்திரங்கள் முழங்கிட.. மங்கள நாண்சூடியே
பொதிகை மலைசூடும் வான்முகில் போல..
எதுகையென இருங்கள் இருவரும்!
நெடிய சொந்தங்கள் நெஞ்சார வாழ்த்திடவே..
முக்கோடி தேவர்களும்.. முதல் நின்று வாழ்த்திடட்டும்!
என மலர்க்கோடி தூவி நின்று மனதார வாழ்த்துகிறோம் நாங்களும்.....!!

Friday, June 29, 2012

வெட்கம்....!!

Posted by Yellem Lm On Friday, June 29, 2012 No comments

ஆழ் கடல் 
அத்தனையும் 
அகலப்படுத்தி வைத்திருக்கிறேன்...
உன் வெட்கம் உதிர்க்கும் 
முத்துகள் போட்டு வைக்க..
மொத்தமாய் தேவைப்படும் என்று...!!!


Saturday, June 16, 2012

சாட்சி

Posted by Yellem Lm On Saturday, June 16, 2012 No commentsநீ
கடித்து துப்பும் 
நகங்கள் கூட 
நாளை 
சாட்சி ஆகலாம்..
தேவதைகள்.. 
வாழ்ந்தார்கள் என்பதற்கு....!!!
Sunday, June 10, 2012

திருஷ்டி பொட்டு...!!

Posted by Yellem Lm On Sunday, June 10, 2012 No comments


நீ ..
ஒற்றை ரோஜா வைத்து 
தெருவில் 
வரும் போது...


ரோஜா நினைத்ததாம், 


எதற்கு இந்த பூந்தோட்டம்..
 நம்மை திருஷ்டி பொட்டாய்
வைத்து இருக்கிறதென்று.... !!

Friday, June 8, 2012

நீ குளித்த தண்ணீரில்...!!

Posted by Yellem Lm On Friday, June 08, 2012 No comments


நீ மட்டும்
உம்மென்று.. 
ஒரு வார்த்தை சொல்..!!
வானத்தை கவிழ்த்தி வைக்கிறேன்...!!
மேகத்தில் நீ மெதுவாய் குளித்திடு...!!
மின்னலை 
கொஞ்சம் நிமிர்த்தி வைக்கிறேன்..!!
மெல்ல நீ 
சடையில் பின்னிடு....!!
கொஞ்சம் பொறு...!!
நீ குளித்த தண்ணீரில் 
நிலவை கொஞ்சம் கழுவி வைக்கிறேன்...!!
நீ முகம் பார்க்கும் அளவுக்கு 
அது ஒன்றும் அத்தனை வெளுப்பில்லை...!!!

மாமா பொண்ணு ..!!

Posted by Yellem Lm On Friday, June 08, 2012 1 comment

கொட்டியே...
ஆயிரம் பூக்கள் நிறைத்திட்டாலும்.. 


உன்
குறும்புப் பார்வையில் 
அரும்பும் அந்த அழகுக்கு
ஈடாகுமோ..?? 


கோடி சொல் பிணைத்து, 
ஓர் ஆயிரம் கவிதை எதற்கு..?


"மாமா"வென...
நீ  அழைத்திடும்
அந்த...
ஒற்றைச்சொல் போதுமே..!!!