Showing posts with label தை 2010. Show all posts
Showing posts with label தை 2010. Show all posts
Thursday, January 21, 2010
உழவன் இன்றி உலகேது..!! (தை 2010)
நீ விழி மறந்து, வலி சுமந்து..
வியர்வை விருந்திட்டு வளர்த்திட்ட
நெற்பயிரின் வனப்பு கண்டு..
வாய்பிளந்து பொழிகிறது வான் மேகம்..!!
மலை மறைவில் மறைய மறுக்கிறது,
மயக்கத்தில் தினம் மாலை சூரியன்..!!
மண்ணில் நீ விதைத்திட்டாலும்,
கண் எனும் கற்ப பையில் அன்றோ வளர்த்திட்டாய்..!!
ஒவ்வொரு விதையிலும் ஓராயிரம் உயிர் உருவாக்கி..
மண்ணிலும் முத்தெடுக்கும் வித்தையை
உன்னிடத்திலன்றோ இனி பிரம்மனும் கற்று கொள்ள வேண்டும் ..!!
உழைப்பை உருக்கியன்றோ அறுவடையை உரித்தாக்கினாய்
உழைக்கும் முன்னே உருகிபோயிருக்கும்
உன்னிடத்தில் மெழுகு இருந்திருந்தால்..!!

