இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Wednesday, July 11, 2012

பொன்னான தருணம்...!! (திருமண வாழ்த்து)

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Wednesday, July 11, 2012 1 comment


நித்தமொரு நெடுந்தவம் புரிந்திட்டாள் போலும்.. 
நித்தியசெல்வன் உந்தன் நெஞ்சை பறித்திடவே!
நீ வண்டென சுற்றிய வாசனை மலர் இவள்..
ஒற்றைப் பார்வையிலே, ஓராயிரம் மடல்தொடுத்தே..
ஒருநொடியில் மனதைபறித்த கள்ளி இவள்!
இவள் சந்தன சிரிப்பொலியின் - சில
சந்தங்கள் போதுமே உம் காதல்
வாழுமே! பல காலங்கள் நின்று!
உணர்வுகளின் சங்கமத்தில், நினைவுகளால்
கனவுகள் கோர்த்தே - வாழுங்கள்
இரவை நீங்க நிலவைப்போல நினைவில் 
நிறைத்திட்ட உறவாய் என்றென்றும்..!! 

திருமண வாழ்த்து !!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Wednesday, July 11, 2012 No comments


வளரும் காவியமாய் உம் வாழ்க்கை..
தொடங்கிடவே வள்ளுவன் வந்து 
பாடிடட்டும் வாழ்த்துப்பா! - கனவில்தினம் 
கரைந்துபோன உம்காதல் கதைபேசிடவே
கம்பன் இல்லையே இங்கு! 
உம் ஒற்றைக்காதல் போதுமே - வரும்
காவியம்யாவிலும் பேசிடவே!
திரை கடல் இணைத்தே - தினம்
இரவை விழுங்கிட்ட உம் காதல்
கதையை கேட்டிடவே.. வெட்கச்சிவப்பில்
மெல்லமாய் கண்விழிக்கிறான் கதிரவனும்!
மந்திரங்கள் முழங்கிட.. மங்கள நாண்சூடியே
பொதிகை மலைசூடும் வான்முகில் போல..
எதுகையென இருங்கள் இருவரும்!
நெடிய சொந்தங்கள் நெஞ்சார வாழ்த்திடவே..
முக்கோடி தேவர்களும்.. முதல் நின்று வாழ்த்திடட்டும்!
என மலர்க்கோடி தூவி நின்று மனதார வாழ்த்துகிறோம் நாங்களும்.....!!