இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!
Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Friday, June 8, 2012

நீ குளித்த தண்ணீரில்...!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, June 08, 2012 No comments


நீ மட்டும்
உம்மென்று.. 
ஒரு வார்த்தை சொல்..!!
வானத்தை கவிழ்த்தி வைக்கிறேன்...!!
மேகத்தில் நீ மெதுவாய் குளித்திடு...!!
மின்னலை 
கொஞ்சம் நிமிர்த்தி வைக்கிறேன்..!!
மெல்ல நீ 
சடையில் பின்னிடு....!!
கொஞ்சம் பொறு...!!
நீ குளித்த தண்ணீரில் 
நிலவை கொஞ்சம் கழுவி வைக்கிறேன்...!!
நீ முகம் பார்க்கும் அளவுக்கு 
அது ஒன்றும் அத்தனை வெளுப்பில்லை...!!!

Sunday, May 13, 2012

அன்னையர் தினம்

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, May 13, 2012 No comments



நான் சுற்றித்திரிந்த உலகமே...
என்னை தூக்கி சுமந்த அகிலமே...
நான் இந்த உலகையே கைப்பற்ற கூட வேணாம்,  
உன் கைப்பற்றி நடந்திட்டாலே போதும்... 
என்னை விட என்னை அறிந்த 
உன்னை போற்றும் இந்த ஒரு நொடி போதும் 
மறித்து....
மறுபடியும் மறுபடியும் மண்ணில் பிறந்திட வேண்டும் 
உன் மகன் என்ற அந்த ஒற்றைச் சொல்லுக்காய்....

அன்னையர் தின வாழ்த்துக்களுடன் 
என்றும் உங்கள் 

LM



Saturday, April 3, 2010

ஒற்றை பனித்துளி..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Saturday, April 03, 2010 2 comments





உருகிய பின்னும்
இன்னும் உதிராமல்
உனக்காய் காத்திருக்கும்
ஒற்றை பனித்துளி..!

Sunday, March 28, 2010

இறந்து விட்டேன் அழ யாருமில்லை..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 28, 2010 4 comments

 
உயிரும் இல்லை - ஆனால்
ஒருத்தரும் அழவுமில்லை இங்கு
என்னைத் தவிர..!
இத்தனைக்கும் நான் இறந்து விட்டேன்
உன்னை பிரிந்த மறு கணமே..!
 
கண்ணீர் கொண்டு நித்தம்
அழிக்க பார்க்கிறேன்.. 
ஆனால்
ஓயாமல் அடம் பிடிக்கிறது
கண்ணீரை உண்டு உயிர் வாழும் 
உந்தன் நினைவுகள்..!


இன்றாவது மணம் கமழச் சொல்லேன்
நீ கடைசியாய் பறித்த மலரிடம்...!!

    தண்ணீரில் விழுந்த தாமரை..!!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 28, 2010 6 comments



    தண்ணீரில் தவறி விழுந்த
    தாமரை இதழாய் நித்தம் தவிக்கிறேன்
    ஒட்டி உறவாடவும் இல்லை..
    விட்டு விலகவும் இல்லை..
    முட்டி மோதுகிறேன்,
    உன் நினைவுகளோடு...!!

    மௌனமாய் கொலுசு..!!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 28, 2010 4 comments

      
    கொலுசும்..கொஞ்ச நேரம் 
    மௌனமாய் ரசிக்கிறது 
    நீ சிணுங்குவதை..!

    தாமரையும்..
    நீச்சலை மறந்து தண்ணீரில்
    தத்தளித்து மூழ்கப் பார்க்கிறது
    நீ கடக்கும் போது..!
      
    பிரம்மனும்..
    புன்னகைக்கு புது விலாசத்தை
    உன் இதழ் அசைவில் அஞ்சலாய்
    அனுப்பி உள்ளான் போலும் ..!

    Tuesday, March 23, 2010

    இதய தேர்தல்..!!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Tuesday, March 23, 2010 3 comments

     
    என் உயிரின் உயிரான
    வாக்காளப் பெரும(க்)களே..
    உங்கள் இதய தொகுதியில்
    போட்டியிடும் எனக்கு
    உங்களின்...
    இதய வா(ழ்)க்கை அளிக்குமாறு
    உங்கள் இருத(ய)(ட)ம்
    தொட்டு கேட்டுக்  கொள்கிறேன்..!!

    Sunday, March 14, 2010

    விழியோரமாய் விசித்திர வீரன்...!!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 14, 2010 3 comments

    உன்னை படைத்த ஆண்டவனை விட
    நான் அதிகமாய் வியப்பது..
    உந்தன் இமைகளை தான்..!!
    பிறகென்ன கொஞ்சம் கூட பயமில்லாமல்,
    அட கொஞ்சமும் சலனமும் இன்றி...
    எவ்வளவு சகஜமாய்...
    விழிகளோடு ஒட்டி உறவாடுகிறது ..!!

    Monday, February 15, 2010

    நீ இல்லாத குறை..!!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Monday, February 15, 2010 1 comment

    தனிமை தேடி நான் தனித்து நிற்கையில்
    ஆளே இல்லாத அறை...
    அங்கேயும் நிறைந்தே  நிற்கிறது.. 
    நீ இல்லாத குறை..!!

    நீ செல்லமாய் தான் கிள்ளி சென்றாய்... 
    எனக்கோ மொத்தமாய் இழந்த 
    இதயம் போல் வலிக்கிறது
    நாளை வரை வரமாட்டாய் எனும் போது..!

    Thursday, February 11, 2010

    இருவருக்குமாய் ஒரு கூட்டணி..!!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, February 11, 2010 2 comments

    அன்பே..
    யார் யாரோ கூட்டணி  அமைக்கிறார்கள்
    நாமும் அமைத்தால் என்ன..??
    வா நாமும் அமைப்போம்.... இனிதாய்..
    வாழ்க்கை தேர்தலில்
    இதய தொகுதியில்
    காதல் சின்னத்தில் போட்டியிடுவோம்
    நான் மட்டுமே வேட்பாளர்..!!.
    இன்னுமா சந்தேகம்....??
    நீ மட்டுமே வாக்காளர்..!!

    Tuesday, February 2, 2010

    நிலவுக்கு நல்ல நேரம் ..!!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Tuesday, February 02, 2010 2 comments

    அன்று ஒரு நாள் ..
    என்னவள் அமாவாசை நாளில்
    நிலவை தேடி கொண்டிருந்தாள்..!
    நல்ல வேளை நிலவுக்கு அன்று
    நல்ல நேரம் போலும்..!
    இல்லையேல்.... அய்யகோ ..
    அவளின் காந்தப் பார்வையில்
    சாந்தமான அந்த.. வெண்மதியும்
    வெம்மையாயிருக்கும்..!!

    Friday, January 29, 2010

    பிரம்மன் பிதற்றுகிறான்...!!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, January 29, 2010 2 comments

    காதல் போதையில் கச்சிதமாய்
    கம்பன் வடித்த கடைசி கவிதை நாம்...
    பிரம்மன் கூட பொறாமையில் பிதற்றுகிறான்...
    நம்மை படைக்க தெரிந்த அவனுக்கு
    நம்மை போல் காதலை படைக்க தெரியவில்லையே...!!

    Thursday, January 21, 2010

    பைத்தியகாரர்கள்..!!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 1 comment

    பைத்தியகாரர்கள்
    அப்புறம் என்ன..
    உன்னை பார்த்த பின்னும்
    அழகி போட்டி நடத்துகிறார்களே.......!!

    அப்ப கூட வரல..!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 4 comments

    நான் அழும் போதெல்லாம் அத்தனை முறை
    கை கொடுப்பாள் அம்மா .. அப்பவும் வரல..!

    நான் நடை பழகுவதிலிருந்து...
    உடை பழகும் வரை கை கொடுத்தார்  அப்பா... அப்ப கூட வரல..!

    தினம் நூறு பொய் சொல்லி
    நண்பனுடன் ஊர் சுற்றும் போதும் வரல..!

    ஓடும் ரயில் என ஒரு முறை தான் கை குடுத்தேன்..
    உன்னை கீழே விழாமல் பிடிப்பதற்காய்..!

    இப்போ வந்திருச்சு...
    அடுத்து நான் இறங்கும் முன்
    அந்த ரயிலை விட அத்தனை நீளமாய் கவிதை ..!

    இப்போ என்னாச்சு எனக்கு...??
    சத்தியமாய் விழ போனது நீதானே...??!!!!


    நாளை வரை வரமாட்டாய்

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 1 comment

    தனிமை தேடி நான் தனித்து நிற்கையில்
    ஆளே இல்லாத அறை... அங்கேயும் நீ இல்லாத குறை நிறைந்தே  நிற்கிறது..
    நீ செல்லமாய் தான் கிள்ளி சென்றாய்... 
    எனக்கோ மொத்தமாய் இழந்த இதயம் போல் வலிக்கிறது
    நாளை வரை வரமாட்டாய் எனும் போது...

    நீ சிறிது பேசும் போது நிறுத்தி நிறுத்தி பேச மாட்டாயா என ஏங்குகிறேன்... களைத்து போய் நிறுத்திவிட்டால் என்ன பண்ணுவது...

    நாம் பேசுகையில் புற்களை செல்லமாய் தடவி
    நீ சிணுங்கும் போது சிதறும் சிரிப்பில் 
    மெல்ல நான் பறக்கிறேன் உண்மையில் உன் சொற்களை மறந்து...

    இருந்தும் வறட்சி..!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 2 comments

    நல்ல மழை..!
    நல்ல விளைச்சல்..!
    இருந்தும் வறட்சி..!
    வஞ்சி..
    உன்னை
    வர்ணிக்க
    வார்த்தைகள்
    இல்லையே....!

    Friday, December 11, 2009

    கள்ளியிடம் களவாடச் சென்றேன்...!!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, December 11, 2009 3 comments

    அன்று...
    உன் புன்னகை திருடிய
    என் இதயத்தைத் தேடி,
    உன் கண்ணெதிரே வந்தேன்...
    இன்று உன் கண்ணொளியில்,
    என்னையே திருடி விட்டாயே  கள்ளி.....!!!
    கள்ளியிடமே களவாட வந்தது
    என் தவறு தான்...!!

    உன் பாத சுவட்டில் என் பயணம்..!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, December 11, 2009 6 comments

    என் பாதங்கள் கூட..
    இப்போதெல்லாம்
    உன் பாதையை தேட ஆரம்பித்து விட்டன!
    நீ பார்வையால் பேசி கடந்த பின்னும்,
    உன் நகம் கடிக்கிறேன்..
    நீ நடந்த பாதையில் !
    மெல்ல மெல்ல உன் பாத சுவடுகளும்,
    என் பார்வை தாங்கி..
    புன்னகை சுமக்க பழகி விட்டன !
    அட இதையெல்லாம் விடு...
    இப்போதெல்லாம்,
    உன் பெயர் கூட..
    என்னுடன் பேச தொடங்கி விட்டது
    நீ எப்போது....??
























    Wednesday, December 9, 2009

    முதல் கவிதை ...!!!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Wednesday, December 09, 2009 4 comments

    அன்று 
    பேருந்தில் ஒரு முறை தான்..
    உந்தன் கண்ணை தேடினேன்!
    அடடா...
    இன்று வரை தேடி கொண்டே இருக்கிறேன்..
    என்னை 
    அங்கேயே தொலைத்து விட்டு..!