Thursday, January 21, 2010
நாளை வரை வரமாட்டாய்
தனிமை தேடி நான் தனித்து நிற்கையில்
ஆளே இல்லாத அறை... அங்கேயும் நீ இல்லாத குறை நிறைந்தே நிற்கிறது..
நீ செல்லமாய் தான் கிள்ளி சென்றாய்...
எனக்கோ மொத்தமாய் இழந்த இதயம் போல் வலிக்கிறது
நாளை வரை வரமாட்டாய் எனும் போது...
நீ சிறிது பேசும் போது நிறுத்தி நிறுத்தி பேச மாட்டாயா என ஏங்குகிறேன்... களைத்து போய் நிறுத்திவிட்டால் என்ன பண்ணுவது...
நாம் பேசுகையில் புற்களை செல்லமாய் தடவி
நீ சிணுங்கும் போது சிதறும் சிரிப்பில்
மெல்ல நான் பறக்கிறேன் உண்மையில் உன் சொற்களை மறந்து...
1 comments:
நீ சிணுங்கும் போது சிதறும் சிரிப்பில்
மெல்ல நான் பறக்கிறேன் உண்மையில் உன் சொற்களை மறந்து.../////
hey LM enga irunthu ippadi elutha kathukittenga...
really nice pa
Post a Comment