இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Sunday, March 28, 2010

இறந்து விட்டேன் அழ யாருமில்லை..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 28, 2010 4 comments

 
உயிரும் இல்லை - ஆனால்
ஒருத்தரும் அழவுமில்லை இங்கு
என்னைத் தவிர..!
இத்தனைக்கும் நான் இறந்து விட்டேன்
உன்னை பிரிந்த மறு கணமே..!
 
கண்ணீர் கொண்டு நித்தம்
அழிக்க பார்க்கிறேன்.. 
ஆனால்
ஓயாமல் அடம் பிடிக்கிறது
கண்ணீரை உண்டு உயிர் வாழும் 
உந்தன் நினைவுகள்..!


இன்றாவது மணம் கமழச் சொல்லேன்
நீ கடைசியாய் பறித்த மலரிடம்...!!

    தண்ணீரில் விழுந்த தாமரை..!!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 28, 2010 6 comments



    தண்ணீரில் தவறி விழுந்த
    தாமரை இதழாய் நித்தம் தவிக்கிறேன்
    ஒட்டி உறவாடவும் இல்லை..
    விட்டு விலகவும் இல்லை..
    முட்டி மோதுகிறேன்,
    உன் நினைவுகளோடு...!!

    மௌனமாய் கொலுசு..!!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 28, 2010 4 comments

      
    கொலுசும்..கொஞ்ச நேரம் 
    மௌனமாய் ரசிக்கிறது 
    நீ சிணுங்குவதை..!

    தாமரையும்..
    நீச்சலை மறந்து தண்ணீரில்
    தத்தளித்து மூழ்கப் பார்க்கிறது
    நீ கடக்கும் போது..!
      
    பிரம்மனும்..
    புன்னகைக்கு புது விலாசத்தை
    உன் இதழ் அசைவில் அஞ்சலாய்
    அனுப்பி உள்ளான் போலும் ..!

    Tuesday, March 23, 2010

    இதய தேர்தல்..!!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Tuesday, March 23, 2010 3 comments

     
    என் உயிரின் உயிரான
    வாக்காளப் பெரும(க்)களே..
    உங்கள் இதய தொகுதியில்
    போட்டியிடும் எனக்கு
    உங்களின்...
    இதய வா(ழ்)க்கை அளிக்குமாறு
    உங்கள் இருத(ய)(ட)ம்
    தொட்டு கேட்டுக்  கொள்கிறேன்..!!

    Sunday, March 14, 2010

    விழியோரமாய் விசித்திர வீரன்...!!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 14, 2010 3 comments

    உன்னை படைத்த ஆண்டவனை விட
    நான் அதிகமாய் வியப்பது..
    உந்தன் இமைகளை தான்..!!
    பிறகென்ன கொஞ்சம் கூட பயமில்லாமல்,
    அட கொஞ்சமும் சலனமும் இன்றி...
    எவ்வளவு சகஜமாய்...
    விழிகளோடு ஒட்டி உறவாடுகிறது ..!!

    Sunday, March 7, 2010

    எங்கள் வீட்டு திருமணம்...... !!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 07, 2010 4 comments


    புதுமணம் புரியும் பூமகளே, உன்
    ஓர விழியோரம் ஒதுங்கும் குறுநகைக்கு
    விலங்கிட இனி வேலையில்லை..!!

    கெட்டி மேளம் முழங்கும் நல்வேளை,
    பூவேலியிட்டு மறைத்த மனதை நாளை
    பொன்தாலியிட்டு பறைசாற்று ..!!


    உனக்காய் பிறந்த முறை மாமன்,
    உறைசேரும் எங்கள் குலமகளே..
    வள்ளுவன் வகுத்த வழியில் 
    நல்லறம் பேணி இல்லறம் சிறக்க செய்வாயாக....!!