இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Sunday, March 7, 2010

எங்கள் வீட்டு திருமணம்...... !!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 07, 2010 4 comments


புதுமணம் புரியும் பூமகளே, உன்
ஓர விழியோரம் ஒதுங்கும் குறுநகைக்கு
விலங்கிட இனி வேலையில்லை..!!

கெட்டி மேளம் முழங்கும் நல்வேளை,
பூவேலியிட்டு மறைத்த மனதை நாளை
பொன்தாலியிட்டு பறைசாற்று ..!!


உனக்காய் பிறந்த முறை மாமன்,
உறைசேரும் எங்கள் குலமகளே..
வள்ளுவன் வகுத்த வழியில் 
நல்லறம் பேணி இல்லறம் சிறக்க செய்வாயாக....!!

4 comments:

hey realy nice pa
unga sis marriage ka muni
keep it up

சூப்பர் தம்பி.... வள்ளுவன் வாரிசு என்பதை மணி கொருமுறை நிருபிக்கிறாய்.....
என்னமோ க...க..போ....!!
ஹா.... ஹா

///கெட்டி மேளம் முழங்கும் நல்வேளை,
பூவேலியிட்டு மறைத்த மனதை நாளை
பொன்தாலியிட்டு பறைசாற்று ..!!//

fantastic lines munish

2nd and 3rd lines... i cant understand pa... plz explain....

Post a Comment