இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Monday, February 15, 2010

நீ இல்லாத குறை..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Monday, February 15, 2010 1 comment

தனிமை தேடி நான் தனித்து நிற்கையில்
ஆளே இல்லாத அறை...
அங்கேயும் நிறைந்தே  நிற்கிறது.. 
நீ இல்லாத குறை..!!

நீ செல்லமாய் தான் கிள்ளி சென்றாய்... 
எனக்கோ மொத்தமாய் இழந்த 
இதயம் போல் வலிக்கிறது
நாளை வரை வரமாட்டாய் எனும் போது..!

Sunday, February 14, 2010

காதலா..!! காமமா..??

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, February 14, 2010 2 comments

காரிருள் அள்ளிச் சூடிய

காலை கதிரவனின் 

கன்னிப் பார்வையில்

கண் மலர்ந்து

தனை மறந்து

உருகி... உயிர்விடும்


பனித்துளி....!

காதலா..!! காமமா..??

கனவில் கதவை திறக்கிறேன் ..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, February 14, 2010 2 comments

கண்ணே..
நீ பார்க்கும் போது
நான் குருடனாகிறேன்..!
நீ பேசும் போது
நான் ஊமையாகிறேன்..!
நீ சிரிக்கும் போது
நான் கண் சிமிட்டவும் கூட
மறந்து விடுகிறேன்..!
அட...
நீ கனவில் வந்தால் கூட
கதவை திறக்கிறேன்
இதயத்தில் இடமளிக்க..!

Thursday, February 11, 2010

இருவருக்குமாய் ஒரு கூட்டணி..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, February 11, 2010 2 comments

அன்பே..
யார் யாரோ கூட்டணி  அமைக்கிறார்கள்
நாமும் அமைத்தால் என்ன..??
வா நாமும் அமைப்போம்.... இனிதாய்..
வாழ்க்கை தேர்தலில்
இதய தொகுதியில்
காதல் சின்னத்தில் போட்டியிடுவோம்
நான் மட்டுமே வேட்பாளர்..!!.
இன்னுமா சந்தேகம்....??
நீ மட்டுமே வாக்காளர்..!!

படையெடு இன்றே..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, February 11, 2010 1 comment


வானவில் கொடி ஏந்தும்
வானப்படையின் மேகப் போர்வீரனே..
படையெடு இன்றே
பஞ்சத்தின் பாதக ஆட்சி அகற்ற..!

ஆயிரம் படை கண்டேன் - அவர்தம்
ஆயிரம் கொடி கண்டேன்
எவரதும் இல்லை உன்போல்
ஏழு வண்ணத்தில்..!!

உயிர் உறையும் போர்க்களம்
ஆயிரம் கண்டதுண்டு..!
பயிர் விளையும் போர்க்களம் 
உன் களம் மட்டுமே..!
படையெடு இன்றே
பஞ்சத்தின் பாதக ஆட்சி அகற்ற..!

மனம் மலரும் மண விழா..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, February 11, 2010 1 comment


இன்றே காதல் கொண்டு வண்ணமாக்கிடுங்கள் 
பாசப் புள்ளியில்
நேசக் கோடிட்ட
புது வாழ்க்கை கோலத்தை...!!

வண்ண பூக்களின் வாசனையோடு
வண்ணத்து பூச்சியின் யோசனையோடு
வான்முகில் தோரண வழியில்...
...
தொடரும் இந்த இனிய பயணம்
இருவர் பயணம் ஆயினும்
இட்டு செல்லுங்கள் 
ஒருவர் காலடியை மட்டும்...!!

காதல்..! ஒரு கனவு..!?

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, February 11, 2010 1 comment

காதல் ஒரு கனவு என்கிறார்களே..?
அட.. ஆமாம் ..!
கனவுகள் என்ன கதவை தட்டி விட்டா வருகிறது ..?
காதலும் அப்படித் தானே வருகிறது..!

அப்போ அவர்கள் சொல்வது உண்மை தான்..
ச்சே... ச்சே.. அப்படியெல்லாம் இருக்காது...

அட....
கண்களின் உறக்கத்தில் பிறந்து
மறைவதன்றோ கனவு ..!
ஆனால்
கண்களின் நெருக்கத்தில் நுழைந்து
உறைவதன்றோ காதல்..!

அட.. போங்கப்பா...
காதலும் கனவும் வேறு வேறுதான்..!

Tuesday, February 2, 2010

நிலவுக்கு நல்ல நேரம் ..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Tuesday, February 02, 2010 2 comments

அன்று ஒரு நாள் ..
என்னவள் அமாவாசை நாளில்
நிலவை தேடி கொண்டிருந்தாள்..!
நல்ல வேளை நிலவுக்கு அன்று
நல்ல நேரம் போலும்..!
இல்லையேல்.... அய்யகோ ..
அவளின் காந்தப் பார்வையில்
சாந்தமான அந்த.. வெண்மதியும்
வெம்மையாயிருக்கும்..!!

உழவர் பெருமை...!! (2009)

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Tuesday, February 02, 2010 2 comments

வானம் பார்த்த எம் பூமியின்
மானம் காத்த எம் உழவா..!
வழி தவறிய மேகங்கள்
வழியில் தொலைத்த சில துளிகளோடு
உன் துளி தந்து..
உதிரத்தையன்றோ உரமாக்கினாய்..!
ஆயிரமாயிரம் நெல் மணிகளை
உருவாக்கி கருவாக்கிய தாயல்லவா நீ..!
உன் உழைப்பிற்கு தலை வணங்கும்..
உன்னினம் என்பதால் மார் தூக்கும்..!
அன்பன் முனி...