இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Thursday, January 21, 2010

உழவன் இன்றி உலகேது..!! (தை 2010)

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 2 comments

உழவா..!
நீ விழி மறந்து, வலி சுமந்து..
வியர்வை விருந்திட்டு வளர்த்திட்ட
நெற்பயிரின்  வனப்பு கண்டு..
வாய்பிளந்து பொழிகிறது  வான் மேகம்..!!

மலை மறைவில் மறைய மறுக்கிறது,
மயக்கத்தில் தினம் மாலை சூரியன்..!!

மண்ணில் நீ விதைத்திட்டாலும்,
கண் எனும் கற்ப பையில் அன்றோ வளர்த்திட்டாய்..!!

ஒவ்வொரு விதையிலும் ஓராயிரம் உயிர் உருவாக்கி..
மண்ணிலும் முத்தெடுக்கும் வித்தையை
உன்னிடத்திலன்றோ இனி பிரம்மனும் கற்று கொள்ள வேண்டும் ..!!

உழைப்பை உருக்கியன்றோ அறுவடையை உரித்தாக்கினாய்
உழைக்கும் முன்னே உருகிபோயிருக்கும் 
உன்னிடத்தில் மெழுகு இருந்திருந்தால்..!!

2 comments:

கவிதை வரிகள் மிக அருமை நண்பரே
வாழ்த்துக்கள்

நெற்பயிரின் வனப்பு கண்டு..
வாய்பிளந்து பொழிகிறது வான் மேகம்..!!

chancea illa pa... romba romba cuteee kavithai...
ellla linesum enakku romba pidichirukku

Post a Comment