Categories:
arugankulam
,
LM
,
marriage wishes
,
tamil kavithai
,
winning star
,
yellem85
இடம் மாறிய இதயத்தோடு தினம் கனவில் கதை பேசியும்... பழகிய பாதையிலும் பாதைதவறி, பார்வை தேடிய பாதங்களே!! கால்வலிக்க காத்திருந்து, கண்ணசைவில் கவிதை பருகியதும் போதும் - இதோ மல்லியும் முல்லையும், மங்கள நாதமொடு நட்பொடு சொந்தமென நாற்திக்கும் நல்வாழ்த்திட..! பூமாலைசூடி புதுமஞ்சள் நாண்முடித்திடு - உம் புதுவாழ்வின் முதல்பக்கமே பூத்திடட்டும், சிந்தனை ஒன்றென நீங்கள் சிந்திடும் புன்னகை வண்ணம் கொண்டு..! பாரதி கம்பனொடு, பார்புகழ் வள்ளுவன் வாக்காய் வாழ்ந்திடுவீர் நீவிர்!
0 comments:
Post a Comment